Tuesday, December 21, 2010

மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!

த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌னஅரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது. ்: "

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.

ஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.

No comments:

Post a Comment