Tuesday, December 21, 2010

மழைக்கால‌ப் பராம‌ரி‌ப்பு அ‌வ‌சிய‌ம்

மழைக்காலம் தொடங்கி விட்டது. கட‌ந்த ஒரு ‌சில வார‌ங்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. மழை‌யி‌ல் நமது உடலை ‌மிகவு‌ம் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

மழை‌க் கால‌த்‌தி‌ல் எ‌ளிதாக நோ‌ய்‌க‌ள் தா‌க்கு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது. எனவே, ஒ‌வ்வொரு செயலையு‌ம் ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம்.


க‌ண்ட இட‌த்‌திலு‌ம் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌க் கூடாது. அடி‌க்கடி தலை‌க்கு கு‌ளி‌க்காம‌ல் இரு‌ப்பது‌ம் ந‌ல்லது. கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தட‌வி ‌பிறகு கு‌ளி‌க்கலா‌ம்.

கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌‌ர் ‌அ‌ல்லாம‌ல் வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கலா‌ம். கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ஒரு கை‌ப்‌பிடி வே‌ப்‌பிலை போ‌ட்டு கு‌ளி‌த்தா‌ல் ‌கிரு‌‌மிக‌ள் ஒ‌‌ழியு‌ம்.

பெ‌ண்க‌ள் ம‌ஞ்ச‌ள் தே‌ய்‌த்து கு‌ளி‌க்கலா‌ம். ம‌ஞ்ச‌ள் ந‌ல்ல ‌கிரு‌மி நா‌சி‌னியாக செய‌ல்படு‌ம்.

மழை‌யி‌ல் நனை‌ந்து ஈரமான து‌ணியுட‌ன் இரு‌ந்தா‌ல் உடலு‌க்கு கெடுதலை‌ப் பய‌‌க்கு‌ம். உடனடியாக ஈர‌த் து‌ணியை மா‌ற்‌றி‌வி‌ட்டு, கை, கா‌ல் பகு‌திக‌ளி‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து கழு‌வி ‌விடலா‌ம்.

No comments:

Post a Comment