Tuesday, December 21, 2010

ஆ‌ஸ்துமா‌வி‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.

இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.


பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, சீழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

த‌யிரை சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல்

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.

பழச்சாறு உடலு‌க்கு‌த் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. த‌யிரு‌ம் பழ‌‌ச்சாறு‌க்கு இணையான ச‌த்து‌க்களை‌க் கொ‌ண்டு‌ள்ளது.


மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து.

அ‌ப்ர‌ண்டீ‌‌ஸ் மற்றும் வயிற்றுப் போக்கு‌க்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும்.

மஞ்சள் காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். த‌யி‌ர் ம‌ற்று‌ம் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.

சில தோல் வியாதிகளுக்கு மோ‌ரி‌ல் நனை‌ந்த து‌ணியை‌ பா‌தி‌த்த இட‌த்‌தில க‌ட்டி வருவது ‌சிற‌ந்த மரு‌ந்தாகு‌ம். தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

வெ‌ள்ளை ஒழு‌க்கை குணமா‌க்க

த‌ற்போது ‌நிறைய பெ‌ண்களு‌க்கு வெ‌ள்ளை ஒழு‌க்கு நோ‌ய் ஏ‌ற்படு‌கிறது. உணவு முறை, வா‌ழ்‌க்கை முறை‌யி‌ல் மா‌ற்ற‌ம், மன அழு‌த்த‌ம் போ‌ன்றவ‌ற்றாலு‌ம் வெ‌ள்ளை ஒழு‌க்கு ஏ‌ற்படு‌கிறது.
வெ‌‌ள்ளை ஒழு‌க்கை பல பெ‌ண்களு‌ம் ஒரு நோயாக பொரு‌ட்படு‌த்தாம‌ல் அல‌ட்‌சியமாக ‌வி‌ட்டு‌விடு‌கி‌ன்றன‌ர். இது ‌பி‌ன்னா‌ளி‌ல் பெரு‌ம் ‌பிர‌ச்‌சினையை ஏ‌ற்படு‌த்து‌ம்.

எனவே, வெள்ளை காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழா நெல்லிச் சமூலம், பெரு நெருஞ்சில் இலை, அருகம்புல் வகைக்கு ஒரு கைப்பிடியளவுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து 1 டம்ளர் தயிருடன் கலந்து குடிக்க எவ்வளவு நாட்பட்ட வெள்ளை ஒழுக்காக இருந்தாலும் குணமாகும்.

இதே‌ப்போல ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு‌ம் கா‌க்கர‌ட்டா‌ன் மரு‌ந்தாக உ‌ள்ளது. அதாவது, காக்கரட்டான் வேரைப் பாலில் அவித்து, பாலோடு அரைத்துச் சுண்டைக்காய் அளவு 2 வேளை 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வர மேக வெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர்ப் பாதை அழற்சி, நீர் எரிச்சல் குணமாகும்.

வ‌யி‌று கோளாறு‌க்கு சோ‌ற்று‌க் க‌ற்றாழை

சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.

இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.

எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

‌வி‌ந்தணு‌க்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கையை கூ‌ட்ட

ஜாதிக்காய்க்கு சில நோய்களை தவிர்க்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடலை வலிமையாக்கும்.

வாயு கோளாறு காரணமாக, வயிறு உப்பசம், வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அஜீரண மந்தம் போ‌ன்றவ‌ற்றை ஜா‌தி‌க்கா‌ய் போ‌க்கு‌கிறது.


இது ம‌ட்டும‌ல்லாம‌ல் வாந்தி, பேதி, ஒற்றைத்தலைவலி, மூச்சிரைப்பு, இருமல் ஆகிய பிரச்சினைகளை நீக்கும் ஆற்றல் உடையது ஜாதிக்காய்.

குறிப்பாக ஆண்களுக்கு விந்துக் குறைவை போக்குகிறது. ஜாதிக்காய் எண்ணை, பல்வலி, வாத நோய் ஆகிய சிக்கல்களை நீக்கும் ஆற்றல் உடையது.

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து

பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.
அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.

அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.

இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.

வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.

‌வீ‌ட்டி‌லிரு‌க்கு‌ம் மரு‌ந்து பொரு‌ட்க‌ள்

கொசு கடித்தபின் ஏற்படும் அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, கொசு கடித்த இடத்தில் சிறிது சோப்பைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மிளகைப்போட்டு வைத்த கஷாயத்தைக் குடித்து வந்தால் ஜுரம் குணமாகும்.

மிளகுப்பொடி, நெய், சர்க்கரை, தேன் ஆகியவைகளைக் கலந்து சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

சாப்பிடும்போது நெய்யில் வறுத்த ஏழெட்டு மிளகுகளை முதலில் சாப்பிட்டால், அஜீரணம், வயிற்று வலி முதலியன வராது.

உணவோடு இஞ்சி சேருவதால் சாப்பிட்ட உணவு சுலபமாக ஜீரணமாகிறது. இஞ்சித் துவையலை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. வயிற்று வலி நிற்கும்.

ஜுரம் வந்து குணமானவர்களுக்கு இஞ்சித் துவையல் செ‌ய்து கொடு‌க்கலா‌ம். இ‌ஞ்‌சி துவைய‌ல் சா‌ப்‌பி‌ட்டா‌ல் வாய் கசப்பு போய், நா‌க்கு‌க்கு சுவை ‌கிடை‌க்கு‌ம்.

தா‌ய்மா‌ர்களு‌க்கு பூ‌ண்டு அவ‌சிய‌ம்

குழ‌ந்தை பெ‌ற்ற ப‌ெ‌ண்க‌ள் ‌தினமு‌ம் ச‌த்தான அதே சமய‌ம் உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் உணவை தே‌ர்வு செ‌ய்து உ‌ண்ண வே‌ண்டு‌ம். குழ‌ந்தை‌க்கு பா‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உதவு‌ம் உணவுகளையு‌ம் அ‌திகமாக உ‌ண்ண வே‌ண்டு‌ம்.

எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.


சுறா போ‌ன்ற ‌மீ‌ன்களுட‌ன் அ‌திகமாக பூ‌ண்டை போ‌ட்டு பு‌ட்டு செ‌ய்து ‌பி‌ள்ளை பெ‌ற்றவ‌ர்களு‌க்கு‌த் தருவா‌ர்க‌ள். இதுவு‌ம் பா‌ல் சுர‌ப்பத‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.

தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

இதனா‌ல்தா‌ன் ‌பி‌ள்ளை பெ‌‌ற்ற பெ‌ண்களு‌க்கு தலை‌க்கு ஊ‌ற்று‌ம் போது ந‌ல்லெ‌ண்ணையை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் பூ‌ண்டு போ‌ட்டு அ‌ந்த எ‌ண்ணெயை தே‌ய்‌த்து உட‌ல் முழுவது‌ம் மசா‌ஜ் செ‌ய்‌கி‌ன்றன‌ர்.

பூ‌ண்டி‌ற்கு இ‌த்தகைய மரு‌த்துவ குண‌ம் இரு‌ப்பதா‌ல் ‌பி‌ள்ளை பெ‌ற்ற பெ‌ண்க‌ள் பூ‌ண்டினை ஏராளமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது.

மழைக்கால‌ப் பராம‌ரி‌ப்பு அ‌வ‌சிய‌ம்

மழைக்காலம் தொடங்கி விட்டது. கட‌ந்த ஒரு ‌சில வார‌ங்களாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. மழை‌யி‌ல் நமது உடலை ‌மிகவு‌ம் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

மழை‌க் கால‌த்‌தி‌ல் எ‌ளிதாக நோ‌ய்‌க‌ள் தா‌க்கு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது. எனவே, ஒ‌வ்வொரு செயலையு‌ம் ‌மிகு‌ந்த கவன‌த்துட‌ன் செ‌ய்ய வே‌ண்டு‌ம்.


க‌ண்ட இட‌த்‌திலு‌ம் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌க் கூடாது. அடி‌க்கடி தலை‌க்கு கு‌ளி‌க்காம‌ல் இரு‌ப்பது‌ம் ந‌ல்லது. கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு தே‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தட‌வி ‌பிறகு கு‌ளி‌க்கலா‌ம்.

கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌‌ர் ‌அ‌ல்லாம‌ல் வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌க்கலா‌ம். கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் ஒரு கை‌ப்‌பிடி வே‌ப்‌பிலை போ‌ட்டு கு‌ளி‌த்தா‌ல் ‌கிரு‌‌மிக‌ள் ஒ‌‌ழியு‌ம்.

பெ‌ண்க‌ள் ம‌ஞ்ச‌ள் தே‌ய்‌த்து கு‌ளி‌க்கலா‌ம். ம‌ஞ்ச‌ள் ந‌ல்ல ‌கிரு‌மி நா‌சி‌னியாக செய‌ல்படு‌ம்.

மழை‌யி‌ல் நனை‌ந்து ஈரமான து‌ணியுட‌ன் இரு‌ந்தா‌ல் உடலு‌க்கு கெடுதலை‌ப் பய‌‌க்கு‌ம். உடனடியாக ஈர‌த் து‌ணியை மா‌ற்‌றி‌வி‌ட்டு, கை, கா‌ல் பகு‌திக‌ளி‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து கழு‌வி ‌விடலா‌ம்.

எக்ஸிமா என‌ப்படு‌ம் சொறி சிரங்கு

ம‌னித உட‌லி‌ல் ‌மிக‌ப்பெ‌ரிய உறு‌ப்பு எ‌ன்றா‌ல் அது சரும‌ம்தா‌ன். அதாவது தோ‌ல். தோ‌ல் எ‌ன்பது உடலை மூடி‌யிரு‌க்கு‌ம் உறு‌ப்பு ம‌ட்டும‌ல்ல.. அது ப‌ல்வேறு வகையான ப‌ணிகளை‌ச் செ‌‌ய்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட சரும‌ம் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அ‌தி‌ல் ஒ‌ன்றுதா‌ன் சரும ‌வியா‌திக‌ள். எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.

தோலில் ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை, தோல் தடிமனாகும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்


தோல் காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.

குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும் பாதிக்கப்பட அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.

இவ்வகை வட்டவடிவுள்ள புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், க‌ன்னங்களில் சிவப்பு நிற கொப்புளங்கள் போல் தோன்றும்.
எக்ஸிமா பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்படும் சரும ‌வியா‌தியாகு‌ம். குடும்ப வழியில், எக்ஸிமா மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் இ‌ந்த ‌வியா‌தி ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ண்டு.

எ‌க்‌ஸிமா ஏ‌ற்பட நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும்.

சுற்றுசூழல் காரணிகள் அதாவது குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு.

மன அழத்தமும் சரும நோ‌ய் ஏ‌ற்பட காரணமா‌கிறது.

வறட்சியான த‌ட்பவெ‌ப்ப நிலை மற்றும் தோல் எ‌ப்போது‌ம் வறண்டு காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்

இதுபோ‌ன்ற காரண‌ங்களை மா‌ற்‌றி, சரும‌த்தை பாதுகா‌ப்பத‌ன் மூல‌ம், இ‌ந்த நோ‌யி‌ல் இரு‌ந்து த‌ப்‌பி‌க்கலா‌ம் அ‌ல்லது நோ‌யி‌ன் ‌தீ‌விர‌த்‌தி‌ல் இரு‌ந்து த‌ப்‌பலா‌ம்.

இ‌ந்த நோ‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்புகளாவன :

இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை

வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும்

பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் சரும‌த்‌தி‌ன் நிறம் குறைதல் போ‌ன்ற ‌பி‌ன் ‌விளைவுக‌ள் ஏ‌ற்படலா‌ம்.

எ‌க்‌ஸிமா நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் :

பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலூட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் ‌தீ‌விர‌த்தை குறை‌க்கலா‌ம்.

பாதிக்கப்பட்ட பகுதி‌யி‌ல் சொறிவதை தவிர்க்கவும்

சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும். அதை ‌விடு‌த்து இய‌ற்கையான முறை‌யி‌ல் பா‌சி‌ப்பயறு போ‌ன்றவ‌ற்றை‌‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

நோ‌ய் ‌தீ‌விரமாவத‌ற்கு மு‌ன்பு உ‌ரிய மரு‌த்துவ‌ரிட‌ம் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம்.

நீ‌ங்க‌ள் பய‌ன்படு‌த்‌திய ஆடைக‌ள், பொரு‌ட்களை ம‌ற்றவ‌ர்க‌ள் பய‌ன்படு‌த்துவ‌தி‌ல் இரு‌ந்து தடு‌க்க வே‌ண்டு‌ம்.

எ‌க்‌ஸிமா எ‌ன்பது மோசமான நோ‌ய் அ‌ல்ல. எ‌னினு‌ம், அத‌ன் பா‌தி‌ப்பு ஒ‌வ்வொரு நபரு‌க்கு‌ம் வேறுபடு‌ம். எனவே, ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌க் கொடு‌த்த மரு‌ந்தையோ, அதுபோ‌ன்ற ‌வியா‌தி தா‌ன் எ‌ன்று ‌நீ‌ங்களாக எ‌ண்‌ணி‌க் கொ‌ண்டு வேறு ஒருவரு‌க்கு கொடு‌த்த மா‌த்‌திரைகளையோ சா‌ப்‌பிட‌க் கூடாது.

உ‌ரிய மரு‌த்துவரை அணு‌கி, ச‌ரியான மரு‌ந்தை வா‌ங்‌கி சா‌ப்‌பிட வே‌ண்டியது‌ம் நோயா‌ளி‌யி‌ன் கடமையா‌கிறது.

கரு‌த்தடைகளை ‌நிறு‌த்துவத‌ற்கான கால‌ம்

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம், ஒரு குழ‌ந்தை பெ‌ற்ற த‌ம்ப‌திகளாக இரு‌ந்தாலு‌ம் த‌ற்போது குழ‌ந்தை‌ப் பேறை‌த் த‌ள்‌ளி‌ப் போடுவத‌ற்கான கரு‌‌த்தடை சாதன‌ங்க‌ள் பல வ‌ந்து‌வி‌ட்டன.

கா‌ப்ப‌ர் டி, மா‌த்‌திரைக‌ள், ஆணுறை, பெ‌ண் உறை, ஊ‌‌சி போ‌ன்று ஏராளமான சாதன‌ங்க‌ள் கரு‌த்தடை‌க்காக பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இ‌தி‌ல் ஒ‌வ்வொருவரு‌ம் அவரது உட‌‌ல் ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ம் ஒரு கரு‌த்தடை முறையை‌ மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் பய‌ன்படு‌த்தலா‌ம்.


அதே சமய‌ம், ‌கரு‌த்தடை சாதன‌த்தை ‌நிறு‌த்‌தி ‌வி‌ட்டு குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு தயாராகு‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம் பய‌ன்படு‌த்து‌ம் கரு‌த்தடை சாதன‌த்தை கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு எ‌த்தனை மாத‌ங்களு‌க்கு மு‌ன்பாக ‌நிறு‌த்‌தி ‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்பதை அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.

நீ‌ங்க‌ள் கரு‌த்தடை மா‌த்‌திரைகளை எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ‌நீ‌ங்க‌ள் கருவுற முய‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வத‌ற்கு மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு மு‌ன்பே அதை ‌நிறு‌த்‌தி‌விடுவது ந‌ல்லது.

இ‌‌ந்த மூ‌ன்று மாத கால‌ங்க‌ளி‌ல் ‌நீ‌ங்க‌ள் கரு‌த்த‌ரி‌க்காம‌ல் இரு‌க்க ஆணுறை அ‌ல்லது ‌வி‌ந்தணு‌க்களை‌க் கொ‌‌ல்லு‌ம் ஜெ‌ல்‌லிகளை உடைய பெ‌ண் உறை போ‌ன்றவைதா‌ன் ‌சிற‌ந்த கரு‌த்தடை சாதனமாக இரு‌க்கு‌ம்.. இ‌ந்த மூ‌ன்று மாத கால‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் கரு‌ப்பை‌யி‌ல் கரு‌த்தடை மா‌த்‌திரைகளா‌ல் ஏ‌ற்ப‌ட்ட மா‌ற்ற‌ங்க‌ள் ச‌ரிசெ‌ய்ய‌ப்ப‌ட்டு, கரு‌ப்பை ‌சீரான ‌நிலையை அடைய உதுவு‌ம்.

மேலு‌ம், இ‌ந்த மூ‌ன்று மாத இடைவெ‌ளி‌யி‌ல் உ‌ங்க‌ள் ஹா‌ர்மோ‌ன் சுர‌க்கு‌ம் முறைக‌ள் இய‌ல்பு ‌நிலை‌க்கு‌த் ‌திரு‌ம்பவு‌ம் உதவு‌கிறது. ‌அதே சமய‌ம் உ‌ங்க‌ள் மாத‌வில‌க்கு ச‌ரியாக இரு‌க்‌கிறதா, எ‌ன்பதையு‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஊ‌சியு‌ம் கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்கு மு‌ன்பே ‌நிறு‌த்‌தி‌விட வே‌ண்டு‌ம். ‌நிறு‌த்‌தி 3 மாத‌ கால‌த்‌தி‌ற்கு‌ள் கரு‌த்த‌ரி‌ப்பதை ‌நி‌ச்சயமாக த‌வி‌ர்‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

அதே சமய‌ம், கா‌ப்ப‌ர் டியை‌ப் பய‌ன்படு‌த்‌தி வ‌ந்தா‌ல் மாத‌வில‌க்‌கி‌ன் முடி‌வி‌ல் அதை ‌அ‌க‌ற்‌றி ‌விடு‌ங்க‌ள். அத‌ன்‌பிறகு ‌நீ‌ங்க‌ள் கரு‌த்த‌ரி‌ப்பத‌ற்காக கா‌த்‌திரு‌க்க வே‌ண்டிய அவ‌சிய‌மிரு‌க்காது. இதே ‌நிலைதா‌ன் ஆணுறை, அணு‌க்களை‌க் கொ‌ல்லு‌ம் ஜெ‌ல்‌லிகளை‌ப் பய‌ன்படு‌த்துவது போ‌ன்ற கரு‌த்தடை சாதன‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல், அவ‌ற்றை பய‌ன்படு‌த்துவதை ‌நிறு‌த்‌தியது‌ம் கரு‌த்த‌ரி‌ப்பது ‌நிகழலா‌ம். இவ‌ற்றா‌ல் கரு‌த்த‌ரி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படாது.

எதுவாக இரு‌ந்தாலு‌ம், மரு‌த்துவ‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் செய‌ல்பட வே‌ண்டு‌ம். ‌சில கரு‌த்தடை சாதன‌ங்களை 2 ஆ‌ண்டுகளு‌க்கு மே‌ல் பய‌ன்படு‌த்தவே‌க் கூடாது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட சாதன‌ங்களை 2 ஆ‌ண்டு க‌ழி‌த்து உடனடியாக மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வது ந‌ல்லது. ‌நீ‌ங்களாக த‌ள்‌ளி‌ப் போடுவது உடலை‌ பா‌தி‌‌க்கு‌ம்.

இ‌க்‌சி முறை‌யி‌ல் கரு‌த்த‌ரி‌ப்பு

ஆ‌ணி‌ன் உ‌யிரணுவை சேக‌ரி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். பெ‌ண்‌ணி‌‌ட‌ம் இரு‌ந்து மு‌தி‌ர்‌‌ந்த கருமு‌ட்டையை பி‌ப்பெ‌ட் எ‌ன்ற கரு‌வி மூல‌ம் ப‌த்‌திரமாக ‌பிடி‌த்து‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள்.

ஏ‌ற்கனவே சேக‌ரி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் ஆ‌ணி‌ன் உ‌யிரணு ஒரு ம‌ெ‌ல்‌லிய ஊ‌சி மூல‌ம் ‌பிடி‌க்க‌ப்படு‌ம். அதை கரு‌ப்பை‌யி‌ன் மே‌ல் அடு‌க்கான ஜோனா‌வி‌ன் வ‌ழியாக உ‌ள்ளே செலு‌த்துவா‌‌ர்க‌ள்.

அது வ‌ெ‌ற்‌றிகரமாக மு‌டி‌ந்த ‌பி‌ன்பு கரு‌த்த‌ரி‌ப்பு ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளதா எ‌ன்பதை க‌ண்கா‌ணி‌ப்பா‌ர்க‌ள்‌.

கரு‌த்த‌ரி‌த்து‌வி‌ட்டா‌ல் அ‌ந்த செ‌ல்லை எடு‌த்து ‌பி‌ஜிடி எ‌ன்ற அ‌திந‌வீன ஆ‌ய்வு முறை‌யி‌ல் ஒ‌ளி‌ர் மை‌க்ரா‌ஸ்கோ‌ப் மூல‌ம் ஆரா‌ய்‌ந்தா‌ல் அ‌தி‌ல் பார‌ம்ப‌ரிய கோளாறுக‌ள் இரு‌ந்தா‌ல் க‌ண்ட‌றி‌ந்து‌விடலா‌ம்.

செ‌ல்‌லி‌ல் கோளாறு இரு‌ந்தா‌ல் அ‌ந்த மு‌ட்டையை ப‌திய‌ம் செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். குறைக‌ள் எதுவு‌ம் இ‌ன்‌றி ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல் அ‌ந்த கரு உ‌யிரை தா‌யி‌ன் கரு‌ப்பை‌க்கு‌ள் செலு‌த்‌தி ப‌திய‌ம் செ‌ய்வா‌ர்க‌ள். அது குழ‌ந்தையாக வளரு‌ம்.

மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!

த‌‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌னஅரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது. ்: "

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.

ஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.


ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.

இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரியே எ‌ண்ணெ‌ய்தா‌ன்

இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லாம‌ல் எ‌ப்படி சமை‌ப்பது எ‌ன்று இ‌ல்ல‌த்த‌ர‌சிக‌ள் ந‌ம்மை‌ மறுகே‌ள்‌வி‌க் கே‌ட்பா‌ர்க‌ள். அத‌ற்கு‌, ஒரு சொட்டு எண்ணை கூட பயன்படுத்தாமல் சமையல் செய்வது எப்படி என்று மரு‌த்துவ‌ர் பிமல் சாஜர் நே‌ற்று செ‌ன்னை‌யி‌ல் செய்து காட்டினார்.


உலகம் முழுவதும் இதய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. தற்போது குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை அடியோடு மாறி உடல் உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இல்லை.

குளிர்பானங்கள், பாஸ்ட் புட் முதலியவற்றைதான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய காரணங்களால் சிறிய வயதிலேயே எடை அதிகரிக்கிறது. சர்க்கரைவியாதி, உயர் ரத்த அழுத்த இதயநோய் வருகிறது.

இதய நோய்க்கு எண்ணைதான் மூல காரணமாக விளங்குகிறது. அசைவ உணவுகளை எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதிகநேரம் வறுத்து சாப்பிடுவதால் அதிக எண்ணை உடலில் சேர்கிறது.

எனவே எண்ணை இல்லாமல் சமையல் செய்து சாப்பிட்டால் இதய நோய் வராது என்றும் இதயநோய் இருப்பவர் மட்டுமல்ல, ரத்த நாளத்தில் 10 அடைப்பு இருப்பவர்கள் கூட, ஏன், பைபாஸ் சர்ஜரிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் கூட எண்ணை பயன்படுத்தாத சமையலை சாப்பிட்டால் ரத்தநாளத்தில் ஏற்பட்ட அடைப்பு குறைகிறது என்றும் அறுவை சிகிச்சையே தேவை இல்லை என்றும் இதய சிகிச்சை நோய் நிபுணரும் சாஓல் என்ற விஞ்ஞானம் மற்றும் வாழும் கலை அமைப்பை சேர்ந்த மரு‌த்துவர் பிமல் சாஜர் கூறுகிறார்.

அவர் எண்ணை இல்லாத சமையலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் செய்து காண்பித்தார்.

நான்ஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தி அதில் ஒரு சொட்டு எண்ணை பயன்படுத்தாமல் பக்கோடா தயாரித்து காட்டினார். அதை பலரும் சுவைத்து சாப்பிட்டனர். அதேபோல கோதுமை மாவில் பால் எடுத்து அந்த பாலைக்கொண்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் இன்றி எந்தவித டால்டாவும் பயன்படுத்தாமல் சுவையான அல்வா தயாரித்துக் காட்டினார்.

அதுபோல சாம்பார் சாதம், சாம்பார், உருளைக்கிழங்கு கூட்டு, பட்டர் பீன்ஸ் கலந்த கீரைக்கூட்டு உள்பட பல சமையல்களை செய்து காண்பித்தார்.

அந்த சமையலை அங்கு டாக்டரிடம் பயிற்சிக்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிட்டு ருசித்தனர். அவர்கள் கூறுகையில், எண்ணை பயன்படுத்தி சமைத்தது போன்றே, நல்லசுவையாக உள்ளது என்று தெரிவித்தனர்.

எண்ணை இல்லாத சமையல் குறித்து டாக்டர் பிமல் சாஜர் கூறுகை‌யி‌ல், சாஓல் என்ற விஞ்ஞான மற்றும் வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதன் நோக்கமே இதய நோய் இல்லாமல் எல்லோரும் வாழ வேண்டும். இதய நோய் வந்தவர்களும் அதில் இருந்து விடுபட்டு சுகமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இதய நோய்க்கு மூலக்காரணம் எண்ணைதான்.

எண்ணை இல்லாமல் எல்லா சமையலும் செய்ய முடியும். அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். தென் இந்திய சமையலில் மட்டும் பொரியல், கூட்டு, குழம்பு உள்பட 155 வகைகளை செய்து காட்டி உள்ளோம். அதற்கான புத்தகமாக, `எண்ணை இல்லா தென் இந்திய சமையல்' என்று ஒரு பு‌த்தக‌ம் வெளியிட்டுள்ளோம்.

நான் என்னுடைய மருத்துவ பணியில் இந்தியாவில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோயாளிகளை இருதய அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றி உள்ளேன். அதாவது ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சைக்கு மரு‌த்துவர்களால் சிபாரிசு செய்யப்பட்டவர்கள், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் எங்கள் இருதய திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். திட்டத்தின்படி 3 நாள் பயிற்சி அளிக்கப்படும்.

அதாவது ஒவ்வொரு சாப்பாட்டிலும் என்ன என்ன கொழுப்பு சத்து உள்ளது. எவ்வளவு கலோரி உள்ளது. அவற்றால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினை என்ன, வரும் நோயாளிகளின் வேலை என்ன என்பது குறித்து விரிவாக கேட்டறியப்படும்.

பின்னர் அவர்களுக்கு யோகா கற்பிக்கப்படும். எண்ணை இல்லாத சமையலை நேரில் செய்து காண்பிக்கப்படும். தினமும் 35 நிமிடம் நடைப்பயிற்சி செய்ய ஆலோசனை வழங்கப்படும். மனதில் டென்சன் இல்லாமல் இருக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுபோ‌ன்று வாழு‌ம் கலை ப‌ற்‌றிய முழு‌ப் ப‌யி‌ற்‌சியு‌ம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பழ வகைகளை சாப்பிடலாம். அதில் எந்தவித கெடுதலும் இல்லை. பப்பாளி, கொய்யா, திராட்சை, வெள்ளரிக்காய், வெண்ணை எடுத்த மோர் ஆகியவற்றை நன்றாக சாப்பிடலாம்.

இந்த பயிற்சி முகாமில் அவர்களுக்கு நா‌ங்க‌ள் க‌ற்று‌க் கொடு‌த்தபடி அவ‌ர்க‌ள் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌ முறை‌யி‌ல் கடைப்பிடிக்க வேண்டும். அறுவை ‌சி‌கி‌ச்சையை ‌விட இவ‌ற்றை கடை‌பிடி‌ப்பது எ‌ளிதானது எ‌ன்பதா‌ல் ப‌யி‌ற்‌சி‌க்கு வருகின்ற பெரும்பாலானவர்கள் இதனை‌க் கடைபிடித்து இருதய நோய் இன்றி நலமுடன் வாழ்கிறார்கள்.

ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளவர்கள் அடைப்பு நீங்கி நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். அதற்கு முக்கிய காரணம் எண்ணை இல்லாமல் சாப்பிடுவதே ஆகும் எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்

உடல், முகம் அழகு பெற

மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பொன்நிறமாக மாறும்.

ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டாலும் தேகம் பொன்னிறமாகும்.

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயில் பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக ஆகும்.

முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருருக்கம் மறையும்.

இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும்.

அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.

முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

கானாவாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு நிறம் மாறி வழவழப்பாகும்.

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி பின்னர் குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.

கோரைக் கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடல் பொலிவு உண்டாகும்.

அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடல் அழகும், முக அழகும் கூடும்